சரோஜா தேவி கணவர் யார் தெரியுமா | saroja devi husband | tamil cinema news | kollywood news tamil news
சரோஜா தேவி கணவர் யார் தெரியுமா | saroja devi husband | tamil cinema news | kollywood news tamil newsB. Saroja Devi (born 7 January 1938) is an Indian actress who has acted in Tamil, Kannada, Telugu and Hindi movies. She acted in around 200 films in over six decades. She is known by the epithets "Abinaya Saraswathi" (Saraswathi of acting) in Kannada and "Kannadathu Paingili" (Kannada's Parrot) in Tamil.At the age of 17, Saroja Devi got her big break with her movie, the Kannada film Mahakavi Kalidasa (1955). In Telugu cinema, she made her debut with Panduranga Mahatyam (1959), and starred in a number of successful films until the late 1970s. The Tamil film Nadodi Mannan (1958) made her one of the top actresses in Tamil cinema. After her marriage in 1967, she continued to be the second in demand actress in Tamil films till 1974, but she continued to be one of the top actresses in Telugu and Kannada cinema from 1958 until the 1980s. She also starred in Hindi films until the mid-1960s, starting with Paigham (1959).She played the lead heroine in 161 consecutive films in 29 years between 1955 and 1984. Saroja Devi received the Padma Sri, the fourth-highest civilian honour, in 1969 and Padma Bhushan, third highest civilian award, in 1992 from the Government of India, honorary doctorate from Bangalore University and Kalaimamani award from Tamil Nadu.நடிகை சரோஜாதேவி ஸ்ரீஹர்ஷா திருமணம், பெங்களூரில் 1967 மார்ச் 1-ந்தேதி நடைபெற்றது. சரோஜாதேவி, தமிழ்ப்பட உலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தபோதே, அவருக்குத் திருமணம் செய்து வைக்க தாயார் ருத்ரம்மா ஏற்பாடு செய்தார். இதுபற்றி சரோஜாதேவி ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:எனக்கு திருமணம் செய்யப்போவதாக எனது தாயார் அறிவித்ததும், அது சினிமா உலகில் பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. பொதுவாக, சினிமா நடிகை என்றால் திருமணத்துக்குப்பின் நடிக்க முடியாது. அவளுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது குதிரைக் கொம்புதான். எனவேதான், பலரும் `சரோஜாதேவி இப்போதே ஏன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் இன்னும் பல படங்களில் நடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாமே' என்று கருத்து தெரிவித்து வந்தனர்.ஆனால் எனது தாயார், `எந்த வயதில் எது நடக்க வேண்டுமோ அந்த வயதில் அது நடந்தே தீர வேண்டும்' என்பதில் கண்டிப்பாக இருந்தார். அவருடைய இஷ்டப்படியே நானும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன். திருமணத்துக்கு முன்னால் எனது தோழி சுசீலா என்னிடம் சிறந்த மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்றால், ஆஞ்சநேயருக்கு விரதம் இருக்கவேண்டும் என்று கூறினார். அந்த யோசனைப்படி நான் தினமும் ஈரத்துணியுடன் அந்த விரதத்தை இருந்து வந்தேன். அதன் பலனாகத்தான் எனக்கு சிறந்த கணவர் கிடைத்தார் என்று நினைக்கிறேன்.இவ்வாறு சரோஜாதேவி கூறினார்.அபிநய சரஸ்வதி என்று கன்னட மக்களாலும், கன்னடத்து பைங்கிளி என்று தமிழக மக்களாலும் செல்லமாக அழைக்கப்படுகிற சரோஜா தேவிக்கு இன்று பிறந்த நாள். அவரை பற்றிய ஒரு பிளாஷ் பேக்.தமிழில் அவர் அறிமுகமான படம் மணாளனே மங்கையின் பாக்கியம் என்றாலும் அவருக்கு நட்சதிர அந்தஸ்தை உருவாக்கி தந்த படம் ‛நாடோடி மன்னன். இந்தப் படத்துக்கு அவர் எப்படி வந்தார் என்பதை அவரது வார்த்தைகளிலேயே படிக்கலாம்.கன்னட கச்சதேவயானி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அப்போது கோடி சூரியபிரகாசத்துடன் ஒருவர் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்தார். அவரைப் பார்த்ததும், அங்கு இருந்த எல்லோரும் எழுந்து, வணக்கம் தெரிவித்தனர். ஆனால், அவர் யார் என்று எனக்கு தெரியாது. எனவே நான் பேசாமல் உட்கார்ந்து இருந்தேன். அவர் படப்பிடிப்பு தளத்தினை சுற்றிப் பார்த்துவிட்டு இயக்குனரிடம் சென்றார். என்னைக்காட்டி, "யார் அந்த பெண்" என்று கேட்டார்.அதற்கு இயக்குனர் "அவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகி. புதுமுகம். பெங்களூரை சேர்ந்தவர். பெயர் சரோஜாதேவி" என்று தெரிவித்தார். வந்தவர் பேசாமல் சென்றுவிட்டார். அவர் போகும்போதும் எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவித்து பணிவுடன் வழியனுப்பினார்கள். அவர் சென்றபிறகு "வந்தது யார்" என்று நான் இயக்குனரிடம் கேட்டேன். "அவர்தான் எம்.ஜி.ஆர்" என்று அவர் தெரிவித்தார்.அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். "அவ்வளவு பெரிய மனிதர் வந்து இருக்கிறார். எதுவும் தெரியாமல் சும்மா இருந்து விட்டோமே" என்று நான் வருந்தினேன். எம்.ஜி.ஆர். நடிக்க ஒப்பந்தமாகியிருந்த திருடாதே என்ற படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். என்னை தேர்வு செய்தாலும், ஒரு புதுமுகத்தை எப்படி நமது படத்தில் போடுவது என்று தயாரிப்பாளருக்கு பயம். அதனால் அந்தப் படத்தில் நடிக்கவில்லை.நான் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக அவருடைய சொந்த தயாரிப்பான நாடோடி மன்னன் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக என்னை அவர் நடிக்க ஒப்பந்தம் செய்தார். அந்த படம் என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்கிறார் சரோஜாதேவி.Source : https://en.wikipedia.org/wiki/B._Saroja_DeviSource : https://ta.wikipedia.org/wiki/சரோஜாதேவி